செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் !
செல்போன் டவர் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
By : King 24x7 Angel
Update: 2024-05-02 05:45 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளநெசவாளர் காலனி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் டவர் அமைப்பதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு அப்பொழுது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் கைவிடப்பட்ட நிலையில் செல்போன் நிறுவனம் நீதிமன்றத்தை நாடி பணிகளை மேற்கொள்ள உத்தரவு பெற்றதை தொடர்ந்து காவல்துறை பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ள ஜேசிபி எந்திரத்துடன் வந்தபோது அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் காவல்துறையினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளுவாக மாறியது இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அப்பகுதியில் இருந்த செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர், இதனால் காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பான நிலவியது தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி சுதிர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஒரு வார கால அவகாசம் வழங்கியதை தொடர்ந்து பிரச்சனை முடிவுக்கு வந்தது தனியார் செல்போன் நிறுவனம் டவர் அமைப்பதற்கு நீதிமன்ற உத்தரவின் படி பாதுகாப்பு கொடுக்க வந்த காவல்துறையினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் நெசவாளர்கள் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.