கள்ளசாராய விற்பனை - பொதுமக்கள் போராட்டம்
போராட்டத்தல போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
Update: 2023-12-16 09:32 GMT
மயிலாடுதுறை நகர் ஆடிய பிள்ளையார் கோயில் பகுதியில், தொடர்ந்து கள்ளச்சாராய வியாபாரத்தில், ஈடுபடுவதைக்கண்டித்து ,பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகர்மன்ற உறுப்பினர் மற்றும் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் முன்னிலையில் ,அப்பகுதியை சேர்ந்த ஆண்பெண் 100க்கும்மேற்பட்டோர் கல்லணை பூம்புகார்சாலை ,பொட்டவெளி பகுதியில் சாலை மறியல் செய்தனர். காரைக்காலிலிருந்து கடத்திவரப்படும், பாண்டி ஐஸ் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுவருவதாகவும், அங்கே வரும் குடிமகன்களால் தொடர்ந்து பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுவதாக பலமுறை புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை, என குற்றஞ்சாட்டினர். இதன் எதிரொலியில் ,திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிமகன்கள் குடித்துவிட்டு வீசியெறிந்த காலி பாக்கெட்டுக்களை அள்ளிச்சென்று சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர். போராட்டக் காரர்களிடம் போலீசார், மற்றும் தாசில்தார் சபிதாதேவி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததன்பேரில் ,பொதுமக்கள்சாலை மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இதனால் கல்லணை பூம்புகார் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.