CITU தொழிற் சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்..

தொழிலாளர்கள் பதிவு ஆவணங்கள், அழிக்கப்பட்டா தை தொடர்ந்து, தொழிலாளர் நலவாரியம் மூலம், சிறப்பு முகாம் நடத்தி, தொழிலாளர்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், CITU தொழிற் சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்.

Update: 2024-01-31 11:47 GMT

கோரிக்கை ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு, இந்திய தொழிற்சங்க மையம் CITU - பெரம்பலூர் மாவட்டக் குழு சார்பில், CITU மாவட்ட இணைச் செயலாளர் ஆறுமுகம் தலைமையில்கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் CITU மாவட்ட செயலாளர் அகஸ்டின் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இதில் கடந்த ஒரு மாத காலமாக மாநில முழுவதும் நல வாரியத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட 70 லட்சம் தொழிலாளர்களின் தரவுகளும் ஆவணங்களும் அழிந்து விட்டதாக தெரிகிறது , இதனால் மூன்று மாதமாக கட்டுமானம் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை, பண பயன்கள் கேட்டு விண்ணப்பித்த யாருக்கும் பணப்பயன் வழங்கவில்லை, புதிய அட்டை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது, எனவே உதவி ஆய்வாளர் மூலம் அனைத்து பகுதிகளிலும் முகாம் அமைத்து தொழிலாளர்களுடைய ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கான தனி ஏற்பாட்டை செய்திட வேண்டும், தொழிலாளர்களிடம் உள்ள சான்று ஆவணங்களை எந்தவித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் ஏற்கப்பட வேண்டும், ஆன்லைன் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை காலத்தில் முடித்து, புதுப்பிக்க தவறியவர்களுக்கு கால நீடிப்பு வழங்கிட வேண்டும், நேரடி விண்ணப்பிக்கும் முறை தொடரப்பட வேண்டும், ஆன்லைன் தரவுகள் அறிவு குறித்து முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க கோரி, கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அழகர், பெரியசாமி , சின்னம்மாள், விஜயகுமார், சின்னையன் மாவட்ட தலைவர் ரெங்கநாதன் மாவட்ட பொருளாளர் ரங்கராஜ், பொது தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் சரண்குமார், ஆட்டோ சங்க தொழிற்சங்க நிர்வாகிகள் தீனதயாளன், காளீஸ்வரன், இன்பராஜ் சாலையோர வியாபாரி கிளை நிர்வாகிகள் முருகன், ராமலிங்கம் பிரேமா, சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News