மகளை அரசுப் பள்ளியில் சேர்த்த நகர மன்ற தலைவர்
அனைவரும் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பள்ளிபாளையம் நகர் மன்ற தலைவர் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்தார்;
By : King 24X7 News (B)
Update: 2024-06-11 15:25 GMT
நகர்மன்ற தலைவர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி நகர் மன்ற தலைவராக இருப்பவர் மோ.செல்வராஜ். இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள் செயல்படுவதை கண்டு ஈர்ப்பு கொண்டு, நகர்மன்ற தலைவர் தனது மகளை ஒன்றாம் வகுப்பிற்காக கண்டிப்புதூர் நகராட்சி துவக்கப்பள்ளியில் சேர்த்தார்.
மேலும் பள்ளி வளம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்..