கேரளா கழிவு வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள்

கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை குழித்துறை பகுதியில் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

Update: 2024-03-24 16:05 GMT

கழிவு வாகனத்தை சிறப்பிடித்த மக்கள்

கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், இறைச்சி, பிளாஸ்டிக் கழிவுகளை குமரி எல்லை சோதனைச்சாவடி வழி யாக நள்ளிரவில் குமரி மாவட்டம் கொண்டு வந்து நீர் நிலைகள் மற்றும் சாலைகளில் கொட்டிவிடு கின்றனர்.

இதனால் பொதுமக் கள், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங் களை நடத்தி வருகின்ற னர். இந்நிலையில் இன்று அதிகாலை கேரளாவில் இருந்து இறைச்சி கழிவு மற்றும் மருத்துவ கழிவுகள் ஏத்திக்கொண்டு குமரி மாவட்டத்திற்குள் வந்தது இதை பார்த்த பொதுமக்கள் அந்த வாகனத்தை துரத்திச் சென்று குழித்துறை பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.

தகவல் அறிந்து களியக்காவிளை போலீசார் குழித்துறைக்கு விரைந்து சென்றனர். பின்னர் பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்

Tags:    

Similar News