செஞ்சி அருகே சுடுகாட்டு பாதை வேண்டி சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்கள்

செஞ்சி அருகே சுடுகாட்டு பாதை வேண்டி சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்களிடம் அதிகாரிகளின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து கலைந்து சென்றனர்.;

Update: 2024-06-11 09:16 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சியை அடுத்த கம்மந்தூர் மதுரா பாண்டியன்குளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான சுடுகாட்டிற்கு இறந்தவர்கள் உடலை தனியார் நிலத்தின் வழியாக எடுத்து செல்கின்றனர்.

எனவே தங்களுக்கு தனியாக சாலை வசதி செய்து தரும்படி மூன்று மாதம் முன்பு அப்பகுதி மக்கள் செஞ்சி தாசில்தாரிடம் மனு கொடுத்திருந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியை சேர்ந்த யாகோப் 90 என்பவர் இறந்து போனார்.

Advertisement

அன்று மாலை அவரது உடலை தனியார் நிலத்தின் வழியாக எடுத்து செல்ல நிலத்தின் உரிமையாளர் எதிர்ப்பு தெரித்தார்இதையடுத்து கிராம மக்கள் நேற்று மாலை 5 மணியளவில் மரூர்-கம்மந்துார் ரோட்டில் சாலை மறியல் செய்தனர். தகவல் அறிந்த செஞ்சி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் செய்தவர்களிடமும், நிலத்தின் உரிமையாளரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதன் பிறகு இரவு 6 மணியளவில் வழக்கமான பாதை வழியாக இறந்தவர் உடலை கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News