இரு பிரிவினர் மோதல் : அணைக்கட்டில் பரபரப்பு

இரு பிரிவினரைச் சேர்ந்த இளைஞர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் அணைக்கட்டு பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.;

Update: 2024-04-23 05:16 GMT

போலீசார் பேச்சு வார்த்தை 

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், உமையம்பட்டு மதுரா அம்மனூர் கிராமத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கும், வண்ணந்தாங்கல் காலனி பகுதியைச் சார்ந்த இளைஞர்களுக்கும் ஏற்கனவே வாய் தகராறு ஏற்பட்டு ஊர் பெரியோர்கள் முன்னிலையில் சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து இருந்தனர். இந்நிலையில் அம்மனூர் கிராமத்தைச் சார்ந்த இரண்டு வாலிபர்களை, வண்ணாந்தாங்கள் காலனி பகுதியை சார்ந்த இளைஞர்கள் அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து அவர்களை அடித்துள்ளனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து வண்ணாந்தாங்கள் கிராமத்தில் அம்மனூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று கூடி சண்டையிட்டதால் இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டது. மேலும் சம்பவம் குறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் இரு பிரிவினருக்கு இடையே சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.மேலும் பிரச்சினை தொடர கூடாது என அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இரவு முழுக்க பாதுகாக்கப்பட்டு வருகிறது.இரு இளைஞர்களின் மோதல் சம்பவத்தால் இரு ஊர் பகுதியில் பெரும் கலவரமாக காட்சியளித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags:    

Similar News