ஆத்தூர் அருகே இருதரப்பினர் மோதல்: மேலும் 3 பேர் கைது
ஆத்தூர் அருகே இருதரப்பினர் மோதல் விவகாரத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-02-08 09:18 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சமூக வலைத்தளங்களில் ஒரு பிரிவினரை பற்றி இன்னொரு பிரிவினர் தரக்குறைவாக பதிவிட்டதால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆத்தூர் ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசார் தேடி வந்த சுப்பிர மணியம், சரவணன், கவுதம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து கல்பகனூர் கிராமத்தில் ஆங்காங்கே 25 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.