தாழையூத்துப்பட்டியில் குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர்

தாழையூத்துப்பட்டியில் குடிநீர் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக திறந்து வைத்தார்.

Update: 2024-01-05 09:31 GMT

தாழையூத்துப்பட்டியில் குடிநீர் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக திறந்து வைத்தார்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, குப்பம் ஊராட்சியில் உள்ள தாழையூத்துப்பட்டியில் ரூபாய் 440.63 கோடி மதிப்பீட்டில் குடிநீர் சேகரிப்பு மற்றும் நீருந்து நிலையம் அமைக்கப்பட்டது. அந்தத் திட்டத்தை இன்று தமிழக முதலமைச்சர் சென்னையில் இருந்து, காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து இத்திட்டத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் தங்கவேல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் கார்த்திக், குடிநீர் திட்ட மேற்பார்வை பொறியாளர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags:    

Similar News