திருச்செங்கோடு நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் திருச்செங்கோடு நகராட்சியில் நான்காவது கட்ட முகாம் நடைபெற்றது.
மக்களை தேடி அரசு செல்லும் நோக்கத்தோடு மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் கடந்த 18ஆம் தேதி கோவையில் துவங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து மற்ற பகுதிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு மின்சார வாரியம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வைத் துறை மாற்றுத்திறனாளிகள் துறையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் தரப்பட்டு 30 நாட்களுக்குள் தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மூன்று கட்டங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு இன்று நான்காம் கட்டமாக 8 9 10 17 18 23 ஆகிய ஆறு வார்டுகளுக்கு மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது பொதுமக்களை முகாமுக்கு ஈர்க்கும் வகையில் காலையில் முகாமிற்கு வந்த பொதுமக்களை பூரண கும்ப மரியாதை உடன் மலர்கள் தூவி இனிப்புகள் வழங்கி ஆட்டம் பாட்டம் ஆடி மனு கொடுக்க வந்த பொது மக்களை வரவேற்றனர்.
நகராட்சி நிர்வாகத்தினர் இதனை அடுத்து இலவச வீட்டு மனை பட்டா மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு மனுக்கள் வாங்கப்பட்டன இதில் உடனடியாக தீர்வு காணப்பட்ட நபர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு நகராட்சி ஆணையாளர் சேகர் நகராட்சி மேலாளர் குமரேசன் துப்புரவு அலுவலர் வெங்கடாஜலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்