நெல்லை அருங்காட்சியகத்தில் 35வது இலக்கிய கூட்டம்
முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி இலக்கிய கூட்டம்.;
Update: 2024-03-12 11:54 GMT
இலக்கிய கூட்டம்
முன்னாள் தமிழக முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் தொடர் இலக்கிய கூட்டம் நடைபெற்று வருகின்றது.
அதில் 35வது கூட்டத்தை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். இதில் கலை பதிப்பகத்தின் ஆசிரியர் கவிஞர் பாப்பாகுடி இரா.செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.