தர்மபுரியில் முதல்வர் பிரச்சார கூட்டம்
தடங்கம் கிராமத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.
தருமபுரியில் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று நடந்த பிரச்சார பொதுக்கூடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பங்கேற்று தருமபுரி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மணி, கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு பேசிய முதலமைச்சர், இந்தியாவில் சமூக நீதி காக்கபட வேண்டும் என்றால், பாசிச பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். சாதி மத உணர்வ தூண்டிவிட்டு அதில் குளிர்காயும் கட்சி தான் பாஜக. சமூக நீதி பேசி வரும் பாமக ராமாதாஸ் எங்கே கூட்டணி வைத்திருக்கிறார், ஏன் அங்கே கூட்டணி வைத்திருக்கிறார் என்று பாமகவினருக்கே நன்றாகவே தெரியும்.
இந்தியா கூட்டணி என்பது மக்களுக்காக பாடுபடும் கட்சி, கலைஞர் அவர்களை பற்றி பேசிய முதலமைச்சர் சாமானிய மக்களுக்காக ஆட்சி அமைத்தவர் கலைஞர் பிற்படுத்தபட்டோர் சமுதாய நலனுக்காக, பல்வேறு வாய்ப்புக்களை உருவாக்கி கொடுத்தவர் கலைஞர். வன்னியர் சமூகம் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், இட ஒதுக்கீட்டில் போராட்டத்தில் உயிர் நீத்த அந்த குடும்பங்களுக்கும் மாதம் மூன்றாயிரம் ரூபாய் வழங்கபடுவது.கலைஞர் ஆட்சியில் தான். ஓட்டு மட்டும் போடும் சமுதாயமாக வன்னியர் இருந்திருக்கும் அதை மாற்றியவர் கலைஞர் என்று பாரட்டியவர் ராமாதாஸ், அதை மாற்றிட முடியுமா, என்றார்.