பிரபல சைவ ஓட்டல் உணவில் கரப்பான் பூச்சி ?..

மயிலாடுதுறையில் பிரபலமான சைவ உணவகத்தில் சிறுமி சாப்பிட்ட பன்னீர் பரோட்டா உணவில் கரப்பான் பூச்சி இறந்து கிடப்பதை கண்டு சிறுமி வாந்தி எடுத்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2024-05-19 01:43 GMT

பன்னீர் பரோட்டாவில் பூச்சி 

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் இயங்கி வரும் ஆதி தங்கும் விடுதியில் குளிர்சாதன வசதியுடன் உள்ள ஹோட்டல் ஶ்ரீ ஆனந்த பவன் இயங்கி வருகிறது. மயிலாடுதுறை அருகே மூவலூர் தெற்கு தெருவை சேர்ந்த சுந்தர் என்பவர் தனது குடும்பத்தினருடன் வைத்திஸ்வரன்கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வரும் வழியில் ஆனந்தபவன் சைவ உணவகத்தில் உணவு அருந்தி உள்ளார்.அவரது மனைவியும் 12 வயது மகள் சிவபிரியை பன்னீர் பரோட்டா ஆர்டர் செய்து சாப்பிட்டனர். அப்போது சிறுமி சாப்பிட்ட பன்னீர்பரோட்டாவில் முழு கரப்பான் பூச்சி ஒன்று இறந்து கிடந்துள்ளது கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி வாந்தி எடுத்துள்ளார்.

தொடர்ந்து தனக்கு வயிறு வலிப்பதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து உணவக நிர்வாகத்தினர் உரிய பதில் அளிக்கவில்லை என்றும் ஹோட்டலில் அதிகளவில் ஈக்கள் மொய்ப்பதாகவும், பூனை சத்தம் கேட்பதாகவும் குற்றசாட்டிய சுந்தர் இச்சம்பவம் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு குறுச்செய்தி அனுப்பியுள்ளதாகவும் இதுவரை பதில் கிடைக்கவில்லை என்று வேதனையுடன் கூறினார். இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்தினர் கூறுகையில், உணவில் சமையல் செய்யும்போது எதுவும் விழவில்லை என்றும் உணவில் கிடப்பது கரப்பான் பூச்சி இல்லை என்றும் ஈசல்தான் விழுந்துள்ளதாகவும் அதற்கு மன்னிப்பு கோரியதாகவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News