உத்தமசோழபுரத்தில் ரூ.12.45 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம்

உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் ரூ.12.45 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் விற்பனையானது.

Update: 2024-05-09 06:45 GMT

கொப்பரை தேங்காய் ஏலம் 

சேலம் அருகே உத்தமசோழபுரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் தேசிய வேளாண் மின்னணு சந்தை  இணையதளம் வாயிலாக நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், சேலம், நாமக்கல், ஈரோடு, காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் கலந்து கொண்டனர். கொப்பரை தேங்காய் கிலோ குறைந்தபட்சமாக ரூ.70-க்கும், அதிகபட்சமாக ரூ.95-க்கும் விற்பனையானது. மொத்தம் சுமார் 15 டன் அளவுள்ள 311 மூட்டை கொப்பரை தேங்காய் ரூபாய் 12 லட்சத்து 83 ஆயிரத்திற்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சுப்ரமணி தெரிவித்தார்.
Tags:    

Similar News