சத்தியமங்கலத்தில் ரூ.3.84 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த ஏலத்தில் ரூ.3.84 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.;
Update: 2024-05-15 05:34 GMT
பைல் படம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பு கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர் மூட்டை: 90 எடை: 44.16 குவிண்டால் மதிப்பு: ரூ. 3.84 இலட்சம் கிலோ அதிகவிலை: 95.51 குறைந்தவிலை: 85.17 சராசரிவிலை: 90.34 விற்பனை நடைபெற்றதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.