மாஞ்சோலையில் நிர்பந்தம் செய்து பணி நீக்கம் : கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
மாஞ்சோலையில் தோட்டங்கள் அழிவிற்கு அரசு அனுமதி வழங்கக்கூடாது என டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
கோவை குனியமுத்தூரில் உள்ள இல்லத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்தித்தார்.அப்போது தமிழகத்தில் நீலகரி,நெல்லை, திண்டுக்கல் உட்பட 5 மாவட்டங்களில் தேயிலை தோட்டங்கள் மற்றும் காபி தோட்டங்கள் உருவாக்கப்பட்டு 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருவதாக தெரிவித்தார்.
நெல்லை களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கபட்டு இவை 99 வருட குத்தகைக்காக பிபிடிசி என்ற நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது
என்றவர் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை விருப்ப ஓய்வு என்ற பெயரில் கட்டாயமாக கையெழெத்து வாங்கி வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறினார்.
இன்றுடன் வேலையை விட்டு நிறுத்தி விட்டதாகவும் 45 நாட்களுக்குள் இருப்பிடத்தை காலி செய்ய வலியுறுத்து வருவதாகவும் தெரிவித்தார்.8700 ஏக்கர் நிலம் வனத்துறைக்கு சொந்தமான நிலம் எனவும் இந்த நிர்வாகததிற்கான ஒப்பந்தம் முடிவடைகின்றதே தவிர இதை காரணம் காட்டி பணியாளர்களை வெளியேற்றுவது எனபது சரியல்ல என்றவர் 20 முதல் 30 வருடம் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு ஒரு லட்சம் தருவதாக கூறி விட்டு இப்போது 25 சதவீதம் மட்டுமே கொடுப்பதாக சொல்லி மோசடி செய்து உள்ளனர் என குற்றம் சாட்டினார்.
தமிழகத்தை சார்ந்த இலங்கை மலையகத் தமிழர்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு வேலை வாய்ப்பிற்காக தேயிலை தோட்டங்கள் ஏற்படுத்தபட்டதாகவும் நான்கு ஐந்து தலைமுறையாக இருப்பவர்களை வெளியேற சொல்வது என்பது சரியல்ல எனவும்,
தமிழக முதல்வர் இந்த பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு தொழிலாளர் வாழ்வை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.மேலும் குத்தகை காலம் முடிந்தால் அதை டேன் டீ நிர்வாகம் எடுத்து நடத்த வேண்டும் என்றவர் சட்டமன்றத்தில் இது குறித்து கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் எனவும் இது தொடர்பாக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் கொடுத்துள்ளதாகவும் இந்த விஷயத்தில் அரசியல் பாராது ,
அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மாஞ்சோலை தேயிலை தோட்டத்து நிலங்களை hdfc வங்கியில் அடகு வைத்து கடன் வாங்கி உள்ளனர் எனவும் அதில் பல அத்துமீறல்கள் நடந்து இருக்கின்றது எனவும் வேறு ஏதோ தவறான செயலில் ஈடுபட சதி இருப்பதாகவும் 2015ல் கடன் பெற்று உள்ளனர் எனவும் அரசு இவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றவர் அதிகாரிகள் எப்படி தடையில்லா சான்று வழங்கினர்.
அரசின் நிலத்தை எப்படி அடகு வைத்தனர் என கேள்வி எழுப்பியவர் சட்ட சிக்கலை உருவாக்கி தொழிலாளர்களை வெளியேற்ற பார்ப்பதாகவும் தேயிலை தோட்டங்களை அழிவிற்கு தமிழக அரசு அனுமதிக்க கூடாது என தெரிவித்தார்.