‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி
தலைமையாசிரியர்களுடன் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி;
டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தலைமையாசிரியர்கள்/ஆசிரியர்கள் மற்றும் கற்றல் - கற்பித்தல் நிகழ்வில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடன் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. தத்தமது பள்ளிகளில் தலைமையாசிரியர்கள்/ஆசிரியர்கள் மாணவ/மாணவியரின் நலன் மற்றும் முன்னேற்றம் சார்ந்து மேற்கொண்டுவரும் சிறப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார்.