காபி வித் கலெக்டர் !

நாகையில் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-12-28 03:19 GMT

  நாகையில் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடந்தது.  

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் ஈசனூர் கல்லூரியில் நாகை மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் நாகை மாவட்டத்தை தொழில் முனைவோருக்கு ஏற்ற மாவட்டமாக உருவாக்குதல் நாகை மாவட்டத்திற்கு என்று ஒரு தனித்துவம் உருவாக்குதல் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்துதல் புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெறுதலுக்கான வழிமுறைகள் மற்றும் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்திற்கு உயர்திறன் மையத்தின் அங்கீகாரத்தை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பெறுவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் வளர்ச்சி வெற்றிக்கு தேவையான ஆதாரங்களை தேடுதல் முழு கவனம் செலுத்திய இந்நிகழ்வானது இப்பகுதியில் துடிப்பான தொடக்கமாக இருந்தது இனிமேல் வரும் அடுத்த புதிய தொழில்கள் அடுத்த கட்டமாக ஊருக்கு வைக்க இந்த முயற்சியானது ஒரு முன்முயற்சியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கான நிபுணர் குழு அமைப்பது குறித்தும் பாதிக்கப்பட்டது நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் சையது தாரிக் ஆரிபா கல்லூரி குழும செயலாளர் தமீம் அன்சாரி திட்ட இணை இயக்குனர் கருப்பண்ணன் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட தொழில் முனைவர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News