6வயது சிறுமி உயிரிழப்பு - பள்ளியில் கொடுத்த மாத்திரை காரணமா..?

சிறுமி உயிரிழப்பில் சந்தேகம் என பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை.

Update: 2024-03-08 18:24 GMT

6வயது சிறுமி பலி

கோவை: வரதராஜபுரத்தை சேர்ந்த ராஜாமணி, புவனேஸ்வரி தம்பதியின் ஆறு வயது மகள் தியா ஸ்ரீ, ஐயர் லே அவுட் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

தியா ஸ்ரீ கடந்த 5ஆம் தேதி இரவு வயிற்று வலி ஏற்பட்டதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். முதலுதவி சிகிச்சையாக ஓம வாட்டர் கொடுத்த பெற்றோர் பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் இரவே கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

உடல்நிலை மோசமான சூழலில் சிகிச்சையில் இருந்த தியா ஸ்ரீக்கு வயிற்றில் கட்டி இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்த சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தனது குழந்தை உயிரிழப்பில் சந்தேகம் இல்லை என தெரிவித்துள்ள பெற்றோர் அதேநேரம் மருத்துவ ரீதியிலான காரணங்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் தங்கள் மகள் பள்ளியில் கொடுக்கும் FERROUS SULPHATE & FOLIC ACID மாத்திரைகளை உட்கொண்டு வந்தார் என்ற தகவலையும் தெரிவித்து இருக்கின்றனர்.

சிறுமி உயிரிழப்பு தொடர்பாக சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News