மதுராந்தகத்தில் ஜாக்கெட் பிட் வெட்டி விற்பனை செய்து வாக்கு சேகரிப்பு
மதுராந்தகத்தில் ஜாக்கெட் பிட் வெட்டி விற்பனை செய்து திமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.
By : King 24X7 News (B)
Update: 2024-04-12 15:16 GMT
செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜி.செல்வம் இன்று மதுராந்தகம் நகரத்தில் 24-வார்டுகளிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.. மதுராந்தகத்தில் 22 -வது மாம்பாக்கத்தில் சாலையில் இரு புறங்களிலும் பெண்கள் மலர் தூவி சிறப்பான வரவேற்பளித்தனர்..அதேபோல இருசக்கர வாகன பேரணியும் நடைபெற்றது
மதுராந்தகம் பஜார் வீதியில் வாக்கு சேகரிக்கும்,
போது ராஜா ஜவுளிக்கடையில் வேட்பாளர் செல்வம்ஜாக்கெட் துணி வெட்டி விற்பனை செய்து வாக்காளர்களிடமும் அங்கு உள்ள ஊழியர்களிடமும் துண்டு பிரச்சார நோட்டீஸ் வழங்கி வாக்கு சேகரித்தார்.. இதில் காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, நகர செயலாளர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.