சங்கராபுரத்தில் உணவுப்பொருள் மாதிரிகள் சேகரிப்பு
சங்கராபுரத்தில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவு பொருட்கள் பரிசோதனைக்காக மாதிரி சேகரிப்பு நிகழ்ச்சி நடந்தது.;
Update: 2024-03-18 05:19 GMT
மாதிரி சேகரிப்பு
உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடமாடும் வேன் முலம் மளிகை, பேக்கரி, ஸ்வீட் ஸ்டால், ஓட்டல் ஆகியவற்றில் உணவு பொருட்களின் மாதிரி பாக்கெட்டுகள் சேகரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுதாகரன், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், துணைச் செயலாளர் நாசர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சண்முகம், ஆய்வாளர் சரவணன் ஆகியோர் உணவு பொருட்களைப் பெற்றுக் கொண்டனர். மாவட்ட வணிகர் பேரவை பொருளாளர் முத்துக்கருப்பன், சங்கர், சீனுவாசன், விஜயகுமார், பாலாஜி, ராஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.