வெடி விபத்து இல்லாமல் பட்டாசு உற்பத்தியை மேற்கொள்ள ஆட்சியர் அறிவுரை

வெடி விபத்து இல்லாமல் பட்டாசு உற்பத்தியை மேற்கொள்ள ஆட்சியர் அறிவுரை

Update: 2023-12-22 17:46 GMT
வெடி விபத்து இல்லாமல் பட்டாசு உற்பத்தியை மேற்கொள்ள ஆட்சியர் அறிவுரை
தொழிற்சாலை நிர்வாகங்கள் அனுமதிக்கப்பட்ட பட்டாசு வகைகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே தொழிலாளர்களை பணியமர்த்த வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் உரிமம் வழங்கப்பட்ட பட்டாசு தொழிற்சாலைகளில் பேன்ஸி வெடிகள் தயார் செய்யப்படுவது சட்ட விரோதம். மேலும் ஆய்வுகளின் போது இத்தகைய தொழிற்சாலைகளில் பேன்ஸி வெடி உற்பத்;தி கண்டறிப்பட்டால் வெடி பொருள் சட்டங்களின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உற்பத்தியை கூட்ட வரைபட ஒப்புதல் இல்லாமல் தற்காலிக கட்டிடங்கள் அமைத்து பணிமேற்கொள்வது சட்ட விரோதமானது. பட்டாசு விற்பனை கடைகளை ஒட்டியோ அல்லது அனுமதிக்கப்படாத இடங்களில் தற்காலிக கூடங்கள் அமைத்து பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து தொழிலாளர்களுக்கும் குரூப் இன்சூரன்ஸ் மற்றும் தொழிலாளர் நல நிதி வசதி நீட்டிக்கப்பட வேண்டும். அலுவலகத்தை ஒட்;டிய அறைகளிலோ, பட்டாசு சேமிப்பு அறைகளிலோ பட்டாசு உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரிவது தொழிற்சாலை வளாகத்தினுள் தான் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதிக சம்பளம் தருவதாக ஒப்பந்ததாரர்கள் ஆசை வார்த்தை காட்டினாலும், தொழிற்சாலை வளாகத்தை தாண்டிய இடங்களிலும், பட்டாசு விற்பனை கடைகளையொட்டிய கூடங்களிலும் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபடுவது சட்ட விரோதமானது மட்டுமில்லாமல் பாதுகாப்பற்ற செயலாகும். பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள் தொழிற்சாலை உரிமையாளர் மூலம் நேரிடையாக சம்பளம் பெறுவதையும், வருகைப் பதிவேட்டில் தங்கள் பெயர் இடம் பெறுவதையும், தவறாமல் தொழிலாளர் அடையாள அட்டை தொழிற்சாலை நிர்வாகத்தினரால் வழங்கப்படுவதையும் கட்டாயம் உறுதி செய்து கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் தொழிற்சாலை உரிமையாளர் தவிர்த்து ஒப்பந்ததாரர்களின் கீழ் பணி செய்யக் கூடாது. மாவட்ட நிர்வாகத்தால் உரிமம் வழங்கப்பட்ட சிறு பட்டாசு தொழிற்சாலைகளில் பேன்ஸி வெடிகள் உற்பத்தி செய்ய அனுமதியில்லாததால் எந்த ஒரு தொழிலாளாரும் அப்பணியை மேற்கொள்ள கூடாது. வெடிபொருள் கையாளப்படும் வரையறுக்கப்பட்ட வளாகத்தை தவிர்த்து பிற இடங்களில் உற்பத்தி பணி மேற்கொள்ள கூடாது என்றும் மேற்சொன்ன வழிகாட்டுதல்களை தொழிற்சாலை நிர்வாகமும், தொழிலாளர்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News