பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் -விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுரை
Update: 2023-12-15 07:34 GMT
விழுப்புரம் மாவட்ட ஊரக பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது, கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், அயோத்தி தாசர் பண்டிதர் குக்கிராம மேம்பாட்டு திட்டம், முதல்வ ரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட் டம், தூய்மை பாரத இயக்க திட்டம், 15-வது நிதிக்குழு மானிய திட்டம் மற்றும் பிற திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்த கலெக்டர் பழனி, அப்பணிகளை தரமாக செயல்படுத்தவும், விரைந்து பணிகளை முடிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண் டும் என்று அறிவுறுத்தினார். மேலும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீட்டுப் பணிகளை விரைவுபடுத்தவும், தொடங்கப்படாத வீட்டு பணிகளை உடனே தொடங்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியா ளர் ராஜா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பொன்னம்பலம், உதவி திட்ட அலுவலர் ஸ்வர்ணலதா மற்றும் மண்டல அலுவலர் கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.