சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தில்  கலெக்டர்  திடீர் ஆய்வு 

சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து  கலெக்டர்  ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-06-07 15:44 GMT

சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து  கலெக்டர்  ஆய்வு மேற்கொண்டார். 

கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறையின் சார்பில்  சின்னமுட்டம் மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறையின் உதவி இயக்குநர்  அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் இன்று (07.06.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, கூறியதாவது:- 

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு வளர்ச்சிப்பணிகளை தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின் படி மாவட்ட நிர்வாகம் மேற்கோண்டு வருகிறது.  அதன்ஒருபகுதியாக சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தினை மேம்படுத்துவதற்கான முன்னெடுப்பு பணிகள் குறித்து மீன்வளத்துறை துணை இயக்குநரிடம்  திட்ட வரைவு தயாரித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.     

 தற்போது சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் 52 நிரந்தர விசைப்படகுகள் வைப்பதற்கான தளம் அமைக்கப்பட்டுள்ளதோடு, 320 படகுகள் வைப்பதற்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். மேலும் சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகம் அருகில் விசைப்படகுகள் கட்டப்பட்டு வரும் பணியினை நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.   ஆய்வின்போது மீன்வளத்துறை துணை இயக்குநர் சின்னகுப்பன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் தீபா, துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News