விருதுநகரில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.;
Update: 2024-01-06 11:47 GMT
விருதுநகரில் உள்ள அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்து, அனைத்து விதமான நோய்கள், தொற்றா நோய்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்தும், அங்கு வரும் புற நோயாளிகளிடம் சுகாதார நிலைய சேவையின் தரம் மற்றும் குறைகள் குறித்தும் கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து சின்னமூப்பன்பட்டி காட்டுநாயக்கன் தெருவில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அப்பகுதி மக்களுடன் அடிப்படை வசதிகள், தொழில், வாழ்வாதாரம், குழந்தைகளின் படிப்பு உள்ளிட்டவை குறித்து கேட்டறிருந்தார். இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.