கழிவுநீர் கால்வாய் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் கழிவுநீர் கால்வாய் பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார்.
Update: 2023-12-16 10:07 GMT
தர்மபுரி நகராட்சி, சுண்ணம்புகாரத்தெரு பகுதியில் தருமபுரி நகராட்சியின் சார்பில் ரூ.9.5 இலட்சம் மதிப்பீட்டில் கடைவீதியில் இருந்து எ.கொள்ளஅள்ளி செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் தர்மபுரி நகர்மன்ற தலைவர் இலட்சுமி நாட்டான் மாது, தருமபுரி நகராட்சி ஆணையாளர் சோ.புவனேஷ்வரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்