வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு நடந்த பயிற்சி வகுப்பினை ஆட்சியர் ஆய்வு
பெரம்பலூர் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு நடந்த பயிற்சி வகுப்பினை ஆட்சியர் ஆய்வு.
Update: 2024-04-08 08:56 GMT
பெரம்பலூர் பாராளுமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு வழங்கப்படும் 2ம் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம், பார்வையிட்டு ஆய்வு செய்தார். வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமாக கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர் 1, வாக்குப்பதிவு அலுவலர் 2, வாக்குப்பதிவு அலுவலர் 3 ஆகியோர் பணி நியமனம் செய்யப்படுவர். 1200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு அலுவலர் ஒருவர் கூடுதலாக நியமிக்கப்படுவர். அதனடிப்படையில் பெரம்பலூர் மற்றும் துறையூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள அலுவலர்கள் தபால் வாக்கு மூலம் தங்களது வாக்குகளை செலுத்துவதற்கு தேவையான வசதிகள், இப் பயிற்சி மையங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்ததை மாவட்ட ஆட்சியர் பார்வையிடாடார். இன்றைய பயிற்சி வகுப்பில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை அளித்தனர், அதனைத் தொடர்ந்து, தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சேவை மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம் பார்வையிட்டார். இந்த நிகழ்வின்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பெரம்பலூர் கோகுல் துறையூர் குணசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வைத்தியநாதன், வட்டாட்சியர்கள் பெரம்பலூர் சரவணன் துறையூர் வனஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.