கலெக்டர் ஆய்வு
தேர்தல் தொடர்பாக தஞ்சாவூரில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு மேற்கொண்டார்.;
தேர்தல் தொடர்பாக தஞ்சாவூரில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் தேர்தல் அலுவலர்களுடன் தேர்தல் நடத்தை விதிகள் கடைப்பிடிப்பது தொடர்பாக ஆய்வு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு அறையில் பார்வையிட்டார். பின்னர் பறக்கும் படையினர் வாகனங்களின் பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் துவக்கி வைத்தார்கள். இக்கூட்டத்தில் அலுவலர்களுடன் தேர்தல் நடத்தை விதிகள் கடைபிடிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சௌந்தர்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தையல் நாயகி மற்றும் பலர் உடன் உள்ளனர்.