மணலோடை  உண்டு உறைவிட பள்ளியில் கலெக்டர் ஆய்வு

Update: 2023-12-19 11:59 GMT

மணலோடை  உண்டு உறைவிட பள்ளியில் கலெக்டர் ஆய்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கன்னியாகுமரி மாவட்டம்  பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட மணலோடை பழங்குடியின நல உண்டு உறைவிட பள்ளியின் சில வகுப்பறைகள் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும், பள்ளிக்கூடத்திற்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மலைவாழ் மக்கள், பள்ளி தலைமையாசிரியர் உள்ளிட்டோர்  மாவட்ட ஆட்சியரிடம்  கோரிக்கை வைத்தனர்.       இதை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில்  சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளியில் கூடுதல் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.42.55 இலட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.       

இந்த பள்ளி வளாகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில்,  மாவட்ட வன அலுவலர் இளையராஜா,  பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக்  ஆகியோர் நேரில் பார்வையிட்டு இன்று  ஆய்வு மேற்கொண்டனர்.  பணிகள் உடனடியாக துவங்கப்படும் என ஆட்சியர் அறிவித்தார்.        இந்நிகழ்ச்சியில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் கனகராஜ்,  பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News