சின்னம் பொருத்தும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி லோக்சபா தேர்தலையொட்டி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2024-04-15 02:38 GMT

சின்னம் பொருத்தும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் தலா மூன்று சட்டசபை தொகுதி களைக் கொண்டுள்ளது. லோக்சபா தேர்தலையொட்டி பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரி ஷ்ரவன்குமார், தேர்தல் பொது பார்வையாளர் அசோக்குமார் கார்க், தேர்தல் செலவின பார்வையாளர் மனோஜ்குமார் நேற்று ஆய்வு செய்தனர்.
Tags:    

Similar News