காணொலி காட்சி மூலம் கலெக்டர் ஆய்வு!
குடிநீர் திட்ட பணிகள் தொடர்பாக இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் காணொளி காட்சி மூலம் ஆய்வு செய்தார்.
Update: 2024-05-11 03:47 GMT
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலமாக நிலுவையில் உள்ள குடிநீர் திட்ட பணிகள், அனைவருக்கும் வீடு வழங்கும் பணிகள் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பணிகள் அனைத்தையும் விரைவுபடுத்தி நிலுவைகளுக்கான காரணங்கள் குறித்து ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்களுடன் கலெக்டர் வளர்மதி காணொலி காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, செயற்பொறியாளர் ராஜவேலு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.