மக்களுடன் முதல்வர் திட்டத்தினை ஆட்சியர் நேரில் ஆய்வு

கூத்தாநல்லூர் நகராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்

Update: 2023-12-29 00:57 GMT

மக்களுடன் முதல்வர் முகாம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறப்படுவதை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெறும் இடத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கியதினை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார் . இந்த முகாமில் கூத்தாநல்லூர் நகர மன்ற தலைவர் பாத்திமா பஷீரா ,வட்டாட்சியர் குருமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News