வாக்குப்பதிவு இயந்திர வைப்பு அறையை ஆட்சியர் ஆய்வு
தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பு அறையை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி ஆய்வு.;
Update: 2024-03-20 05:35 GMT
ஆய்வு
தருமபுரி பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024ஐ முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் மாவட்டத்தில் பல்வேறு வீதமான தேர்தல் முன் எடுப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பு அறையை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பொறுப்பு அலுவலர் தேன்மொழி உடன் இருந்தனர்.