வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தம் பணிகளை ஆட்சியர் ஆய்வு

தர்மபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணிகளை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-04-11 02:30 GMT

சின்னம் பொருத்தம் பணி

தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருவதை தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, நேற்று மாலை பார்வையிட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் காயத்ரி வட்டாட்சியர் பி.ஜெயசெல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News