எஸ்சி, எஸ்டி, கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் சேர ஆட்சியர் அழைப்பு
நடப்பு கல்வி ஆண்டில் எஸ்சி, எஸ்டி, கல்லூரி மாணவர்கள், விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி கலெக்டர் சாந்தி கூறினார்.
இது குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது தர்மபுரி மாவட்டத்தில் நடப்பு 2024-2025ம் கல்வி ஆண்டில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இம்மாவட்டத்தில், 17 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளும், 12 ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதிகளும், ஒரு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியும், 3 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவிகள் விடுதிகளுமாக மொத்தம் 33 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
இவ்விடுதிகளில் தங்கி கல்வி படிக்க விரும்பும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் உணவும், உறைவிட மும்இலவசமாக வழங்கப்படும். மேலும், 4 இணை சீருடைகளும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகளும் வழங்கப்படும். இந்த விடுதிகளில் சேருவதற்கு மாணவ, மாணவிகளின் பெற்றோர். பாதுகாவலரது ஆண்டு வருமானம் 2.50 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும். 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் விடுதியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மாணவர்களுக்கு தங்களது இருப்பிடத்திற்கும், பள்ளிக்கும் இடைவெளி 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும்.
மாணவிகளுக்கு இந்த விதி பொருந்தாது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தாங்கள் சேரும் விடுதியில் விண்ணப்பங்களை பெற்று சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.பள்ளி, கல்லூரி, நிர்வாகம் விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி, கல்வி நிறுவன சான்றொப்பத்துடன் சமர்பிக்க வேண்டும். மேலும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதி திராவிடர் மாணவர், மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.