கடலூர் ஆட்சியர் நேரில் சென்று நலம் விசாரிப்பு
ரயிலில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவலி ஏற்பட்டதால் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடவரை கடலூர் கடலூர் ஆட்சியர் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
Update: 2024-03-02 05:42 GMT
சென்னையிலிருந்து திருவாரூருக்கு இரயிலில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு அசௌகரியம் ஏற்பட்ட நிலையில் உடன் பயணித்தவர்கள் 108-க்கு அளித்த தகவலின் அடிப்படையில் திருப்பாதிரிப்புலியூர் இரயில் நிலையத்தில் துரிதமாக அவரை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கபட்டதை தொடர்ந்து அப்பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் நேரில் சந்தித்து தாய்சேய் நலம் விசாரித்தார். உடன் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.