இந்தியன் வேர்ல்ட் ரெக்கார்ட் விருது பெற்ற 2 வயது சிறுவனை பாராட்டிய ஆட்சியர் சங்கீதா !

இந்தியன் வேர்ல்ட் ரெக்கார்ட் விருது பெற்ற சிறுவன் மற்றும் அவரது பெற்றோர் நேரில் சந்தித்து பாராட்டிய மாவட்ட ஆட்சியர் சங்கீதா.

Update: 2024-03-09 07:01 GMT

ஆட்சியர் சங்கீதா

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (08.03.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா அலங்காநல்லூர் அருகே உள்ள மேட்டூர் கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஜெகத்வீர் மற்றும் அவரது பெற்றோர் நேரில் சந்தித்து, பல்வேறு சிறந்த தனித்திறன்களை வெளிப்படுத்தும் சிறுவன் என்று தனியார் சாதனை அங்கீகாரிப்பு நிறுவனங்கள் அங்கீகரித்த சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் அருகில் உள்ள மேட்டூர் கிராமத்தை சேர்ந்த ரா.பிரபு, அ.கௌரி தம்பதியினரின் மகன் .P. G. ஐகத்வீர் (வயது 2 வருடம் 10 மாதங்கள்) இச்சிறுவன் தமிழ் உயிர் எழுத்துகள் 12, ஆங்கில எழுத்துக்கள் 26, வீட்டு மற்றும் காட்டு விலங்குகள் 45, பூக்கள் 21, காய்கறிகள் 23, உடலின் பாகங்கள் 50, பழங்கள் 33, பறவைகள் 37, மரங்களின் பெயர்கள் 91 ஆகியவற்றை கண்டறிந்து சாதனை படைத்துள்ளதாக 1.India world record 2.kalams world record 3.Nobel world record 4.International Book of record 5.world book of record 6.Guiness super kids record ஆகிய தனியார் சாதனை அங்கீகாரிப்பு நிறுவனங்கள் சான்றிதழ் வழங்கி அங்கீகரித்துள்ளன. இதனையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா,ஜெகத்வீர் மற்றும் அவரது பெற்றோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட ஆட்சித் தலைவர் சிறுவனுக்கு மலர் கொடுத்து வழங்கி பாராட்டினார்.
Tags:    

Similar News