நிதி முறைகேடு குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்கணும்...!

கோடந்தூர் ஊராட்சியில் நிதி முறைகேடு குறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-02-07 12:58 GMT

கோடந்தூர் ஊராட்சியில் நிதி முறைகேடு குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக ஆர்வலர் மெய்ஞான மூர்த்தி பேட்டி. கரூர் மாவட்டம்,க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோடாந்தூர் ஊராட்சியில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் நடத்த உத்தரவிட்டார். கூட்டத்தை முறையாக நடத்தாததால், மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டதன் பேரில், மீண்டும் இன்று கூட்டத்தை நடத்த உத்தரவிட்டார். எதன் அடிப்படையில் இன்று ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் கோடந்தூரில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Advertisement

இந்தக் கூட்டத்தில், ஊராட்சியில் நடைபெறும் திட்ட பணிகள் மற்றும் வரவு செலவு கணக்கு குறித்து விவரம் அளிக்கப்பட்டது. அதில் ஊரில் இல்லாத நிறுவனத்தில் வரவு செலவு செய்ததாக பொய்யான கணக்கு காட்டப்பட்டதால் அது குறித்து கிராம மக்கள் கேள்வி எழுப்பினர். முறையாக ஊராட்சி மன்ற தலைவரோ அதிகாரிகளோ பதில் அளிக்கவில்லை. ரூபாய் 30 முதல் 31 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளதாக, கோடந்துரை சேர்ந்த மெய்ஞான மூர்த்தி என்பவர் பேட்டியளித்துள்ளார்.

Tags:    

Similar News