எட்டயபுரம் வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-06-20 12:38 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கன்னக்கட்டை தடுப்பணையை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி  பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தை  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இத்திட்டத்தின் கீழ் எட்டயபுரம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் கோ.லட்சுமிபதி செய்து வருகிறார். மேலும் அவர் கன்னக்கட்டை ஊராட்சியில் பொதுப்பணித் துறை நீர்வளம் மூலம் கல்லாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கன்னக்கட்டை தடுப்பணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  கன்னக்கட்டை ஊராட்சியில் இருந்து சோழபுரம் வரை செல்லும் கருங்கல் கப்பி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் சிறு பாலத்தையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். கீழஈரால் ஊராட்சி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து எட்டயபுரம் வட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி,  பார்வையிட்டு இன்று 19.6.24 எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஆர்.ஐஸ்வர்யா, மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News