மனிதநேய வார நிறைவு விழாவில் பங்கேற்ற கலெக்டர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மனிதநேய வார நிறைவுவிழாவில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார்.
Update: 2024-02-01 08:45 GMT
மனிதநேயம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனிதநேய வார விழா ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஜனவரி 24 ஆம் தேதிமுதல் ஜனவரி 30 ஆம் தேதிவரை கொண்டாடபடுகிறது. இதனையொட்டி மனிதநேய வார நிறைவு விழா நிகழ்ச்சி அரியலூர் மாவட்டம் விளந்தை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைபள்ளியில் நடைப்பெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் கலந்து கொண்டனர். இதில் மனிதநேய வார நிறைவு விழாவையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது. இதில் உடையார்பாளையம் கோட்டாச்சியர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.