பூங்கா வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

சிவகங்கை பூங்காவில் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.

Update: 2024-01-18 14:05 GMT

சிவகங்கை பூங்காவில் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார். 

தஞ்சாவூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தஞ்சாவூர் மாநகராட்சி சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ், சிவகங்கை பூங்காவில் நடைபெற்று வரும் சுற்றுசுவர் அமைக்கும் பணி, குழந்தைகள் விளையாட்டு மைதானம், நீச்சல் குளம், நடைபாதை சீரமைக்கும் பணி, கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி, அலங்கார விளக்கு அமைக்கும் பணி போன்ற பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதை  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து,  பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மாநகர செயற்பொறியாளர் சேர்மகனி, மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் கீதா, மோகனா, மாநராட்சி உதவி செயற்பொறியாளர் மனோகரன், உதவி பொறியாளர் ஆனந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News