கல்லூரி கனவு: ஒருங்கிணைப்பு கூட்டம்

பெரம்பலூரில் கல்லூரி கனவு என்ற நிகழ்ச்சி குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.;

Update: 2024-05-07 09:06 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரிக் கனவு என்ற நிகழ்வு நடத்தப்படுதவற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா கற்பகம், தலைமையில் மே- 6ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கும் போது, 12ம் வகுப்பு முடித்து கல்லூரி பயில உள்ள மாணவ மாணவிகளுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டும் நிகழ்ச்சியாக ”கல்லூரிக் கனவு” என்ற நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. 12ம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற மாணவ மாணவிகளுகு உயர்கல்விக்காக என்ன படிக்கலாம் என்பது குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையில்,

Advertisement

  கல்லூரிக்கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்வு மே 9ம் தேதி அன்று தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு உயர்கல்வியில் என்னென்ன படிக்கலாம், கலை அறிவியலில் என்ன படிப்புகள் உள்ளது, பொறியியலில் என்ன படிப்புகள் உள்ளது, அறிவியல் தொழில்நுட்பங்களில் என்னென்ன படிப்புகள் உள்ளது என்பன போன்ற விரிவாக தகவல்களை மாணவ மாணவிகளுக்கு வழங்க உள்ளார்கள். பல்வேறு வகையான உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரிகளில் உள்ள படிப்புகள் குறித்த காட்சி அரங்குகள் அமைக்க உள்ளார்கள்.

இந்நிகழ்வு சிறப்பாக அமைந்திட ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். என தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு, சார் ஆட்சியர் கோகுல், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர வைத்தியநாதன் மற்றும் பெரம்பலூர் மாவட்த்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரியின் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News