நாகர்கோவிலில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி: கலெக்டர் துவக்கி வைப்பு

நாகர்கோவிலில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி கலெக்டர் துவக்கி வைத்தார்.;

Update: 2024-05-10 14:14 GMT
கல்லூரி கனவு நிகழ்ச்சியை துவக்கி வைத்த கலெக்டர்

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவ மாணவர்கள்  உயர்கல்வி பயிலுவதற்கான வழிக்காட்டும் நிகழ்ச்சி  “கல்லூரி கனவு” என்ற தலைப்பில் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி கலையரங்கில் இன்று (10.05.2024) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தபி.என்.ஸ்ரீதர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.          அதனைத்தொடர்ந்து பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி கலையரங்கில்  மாவட்ட வேலைவாய்ப்புத்துறை, உயர்கல்வித்துறை, மாவட்ட முன்னோடி வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வாயிலாக   தமிழ்நாடு அரசின் மூலம் மாணவ மாணவிகளின் உயர்கல்விக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் விளக்கும் காட்சி அரங்குகள்,

Advertisement

அனைத்து உயர்நிலைக் கல்வி சார்ந்த கல்லூரிகளில் உள்ள படிப்புகள் குறித்த காட்சி அரங்குகள், உயர்கல்விக்கான கல்விக்கடன் பெறுவதற்கு வங்கியாளர்களின் அரங்கள்    அமைக்கப்பட்டிருந்ததை பார்வையிட்டதோடு, மேலும் கல்லூரிக் கனவு வழிகாட்டி கையேட்டினை மாணவ மாணவியர்களுக்கு வழங்கினார்.       இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட வன அலுவலர் பிரசாந்த், 

மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி,   ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News