கொங்குகலை அறிவியல் கல்லூரி தேசிய கருத்தரங்கம்

கொங்குகலை அறிவியல் கல்லூரி தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2024-02-29 09:39 GMT

கருத்தரங்கம் தொடக்கி வைப்பு

ஈரோடு கொங்குகலை அறிவியல் கல்லூரியின் மத்திய அரசின் உயிரித்தொழில்நுட்பத்துறை நட்சத்திரக்கல்லூரி திட்டம் மற்றும் கணிதத்துறை மூலம்“தனித்துவமான கணிதத்தின் சமீபத்திய போக்குகள்” என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரியின் தாளாளர் பி டி தங்கவேல் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் ஹெச் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். முனைவர்.டி.தமிழ்ச்செல்வம் எமரிட்டஸ் விஞ்ஞானி முன்னாள் கணிதவியல் மூத்த பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி மற்றும் முனைவர். டி. ஆசீர் இணைப் பேராசிரியர் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் கணித அறிவியல் பள்ளி ராமானுஜன் கலந்து கொண்டு தனித்துவமான கணிதத்தின் சமீபத்திய போக்குகள் பற்றி சிறப்புரையாற்றினார்கள் .

இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரிகளை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கு பெற்று தற்போதுள்ளதனித்துவமான கணிதத்தின்ஆய்வு கட்டுரைகளை பற்றி அறிந்து கொண்டனர்.நட்சத்திரக்கல்லூரிதிட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் இணைப்பேராசிரியர்முனைவர்எ. கே . வித்யா பல்வேறு துறைசார்ந்த தலைவர்களபேராசிரியர்கள்மற்றும் மாணவ மாணவியர்கள்கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Tags:    

Similar News