கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருச்செந்தூர் அருகே கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2023-12-26 03:44 GMT
தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டிய பட்டினம், குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் செல்வம் (21), திருச்செந்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் எம்ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இரவு அவர் திடீரென படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வம் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.