சேலம் : கல்லூரி மாணவர் தற்கொலை

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதியில் தனியார் மருத்துமனையில் பகுதி நேர வேளை செய்து வந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-18 01:44 GMT

சேலத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஆனந்தா பாலம் பகுதியை சேர்ந்தவர் வைதேகி. இவருடைய மகன் சஞ்சய் (வயது 23). இவர் சேலம் அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வந்தார். மாலையில் சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள ஒரு தனியார் கண் ஆஸ்பத்திரியில் பகுதி நேர கணினி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்றார். சிறிது நேரத்திற்கு பிறகு அவர் ஆஸ்பத்திரியில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றார்.

வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக பணியாளர்கள் அவர் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு சஞ்சய் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினர். இதனால் ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஆஸ்பத்திரி பணியாளர்கள் அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

தூக்கில் பிணமாக தொங்கிய மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சஞ்சய் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் வைதேகி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சஞ்சய் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இருந்தாலும் சஞ்சய் நண்பர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள், பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News