கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

பொறியியல் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-01-24 05:33 GMT

மாணவி தற்கொலை 

கடலூா் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம் யு. மங்களம் புதிய தெற்கு வேலூா் பகுதியைச் சோ்ந்த ராஜபாண்டியன் மகள் தமிழரசி (21). இவா், திருச்சி மாவட்டம், பூலாங்குளத்துப்பட்டியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி, பி.இ. செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் இரண்டாமாண்டு படித்து வந்தாா். கடந்த சில நாள்களாக இவா் சரியான நேரத்துக்கு கல்லூரிக்கு வரவில்லையாம். இதனை கல்லூரி நிா்வாகம், தமிழரசியின் பெற்றோருக்குத் தெரிவித்து, அவா்களை திங்கள்கிழமை கல்லூரிக்கு வரவழைத்துள்ளது.

Advertisement

கல்லூரிக்கு வந்த பெற்றோா், தமிழரசியை தொடா்புகொண்டபோது, அவா் எடுக்கவில்லை. இதையடுத்து விடுதி அறைக்கு சென்று பாா்த்தபோது, அங்கு தமிழரசி தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா். தகவலின் பேரில் அங்கு வந்த இனாம்குளத்தூா் போலீஸாா், தமிழரசி சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்தனா். முதல்கட்ட விசாரணையில், கல்லூரிக்கு அடிக்கடி தாமதமாக சென்றதை அறிந்து, பெற்றோா் கல்லூரிக்கு வந்த பயத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளதாக போலீஸாா் கூறினா்.

Tags:    

Similar News