கல்லூரி மாணவர் தற்கொலை
நாசரேத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-04-28 12:33 GMT
சரக்கு வாகன ஓட்டுநா் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மணி நகரைச் சேர்ந்தவர் முருகன் மகன் பெருமாள் (21). இவர் நாசரேத்தில் உள்ள கல்லூரியில் பி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை செய்த மாணவரின் உடல் பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.