கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-02-14 11:53 GMT
தற்கொலை
தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானந்தல் மேல தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மகள் மாலதி (18) இவர் புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாலதி நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.