கல்லூரி மாணவி மாயம்
கூத்தப்படியை சேர்ந்த கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-04-22 05:07 GMT
மாணவி மாயம்
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூத்தப்படியை சேர்ந்தவர் கல்லூரி மாணவி 17 இவர் தர்மபுரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 18 அன்று முதல் கல்லூரி மாணவி காணவில்லை.
இதனை அடுத்து மாணவியரின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காததை எடுத்து நேற்று மாலை இது குறித்து பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனை அடுத்து பென்னாகரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.